Sunday, March 27, 2016

ஆக்கிரமிப்பு

பேரிரைச்சல்
ஒதுங்கி
நின்றேன்

சத்தம் தணிய
பேச
தலைப்பட்டேன்

ரம்யமான இன்னிசை
மயிலிறகின் வருடல்
தொடர்ந்த உரையாடல்

கட்டுண்டதும்
தன் இருப்பை விரிவாக்கி
மீண்டும் பேரிரைச்சல்

யாரோ ஒதுங்க
நான் கரைந்து
கொண்டிருந்தேன்


1 comment:

s chitharthan said...

முதலில் அருவி தான் என நினைத்து ரசித்தோம், பின் மழை என அறிந்தபோது, அழகியல் மேலும் கூடியது....