Tuesday, February 24, 2015

இருப்பு

கால்கள் இடறி
குப்புற விழுந்தும்
தலை தூக்கிய
என்னை

ஆணியில் அறைந்து
அவசரமாய்
உலகம்
மகானாக்கி விட

உணர்வுகளுக்கு
மரண தண்டனை அளித்து
மறு கன்னம்
காட்ட தயாராகுகிறேன்

மனுஷியாக
சுய
நிலைக்கு
மாற

இயல்பு மாற்றம்
பூகம்பமாய்
என்னை
உள் அழுத்த

மீண்டு வரவோ
மீண்டும் எழவோ
மறந்து உறைந்த
நேரத்திலும்

தன்னிலை மறந்து
பறக்கும் பட்டாம்பூச்சி
என்னில் சிலிர்ப்பை
ஏற்படுத்த தவறுவதே இல்லை