Monday, June 24, 2013

ஊடுறுவல்


அதிகாரம்
அவமானம்
எதிர்பார்ப்பு
ஏமாற்றம்

உள்ளடங்கி
ஒடுங்கி
தாளிட்ட
கதவை

அன்பு
அகமகிழ்வு
பண்பு
பாசமென

வேகமாய்
தட்ட தலைப்படும்
காற்றை
என் செய்வது

Tuesday, March 5, 2013

வலி

ஐம்பத்து எட்டு
ரோதைகள்
ஏறி
இறங்கின

வெறித்து
கொண்டிருந்தேன்

நெஞ்சை
சுட்டது
நிழல் மறைத்த
நிஜம்

Saturday, January 12, 2013

ஓய்வு


கண்மணி
கண் உருட்டி
Turti 
தலை திருப்பி 
Snoopy
சிகப்பி 
Yippiee
Octi
Dolphi 

ஆடி 
பாடி 
ஓடிய
அனைவருக்கும் ஓய்வு 
ஷ்ரியா 
உறங்கி விட்டாள்  :)

இதம்


அளவான
சாரீரம் 
அதற்கேற்ற
தாள நயம் 
உருகும்
இசைவெள்ளம் 
உறக்கத்தில்
நான் 

பின் குறிப்பு : Crompton க்கும் Titan க்கும்  நன்றி