Wednesday, June 30, 2010

வானவில்

விரிந்த சிறகுகள்
ஒடுக்கின கடமைகள்
கனத்த பொழுதுகள்
கட்டுக்குள் அடங்காமல்
குவிந்திடும் எண்ணங்கள்
கருத்தாக்கும் முயற்சியில்
கையெங்கும் வண்ணங்கள்

Sunday, April 4, 2010

கடற்கரை கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே

ஏப்ரல் 01

எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும்
தெரிந்தும் எதிர்பார்க்கிறேன்
ஏமாற்றத்தையாவது :-)

Sunday, February 14, 2010

பகிர்தல்

பனி மழையில்
நனைந்த
சுவடுகளை
பத்திரப்படுத்துகிறேன்

உன்னிடம்
காட்டி களிப்புற
வெள்ளை சுவடுகள்
பல வர்ணங்களாய்