Wednesday, July 15, 2009

தவிர்த்தல்

கட்டாயத்தில்
காக்கும்
உரிமை
கைவசமானது

சொந்தமில்லா
பொருளுக்கு
விலை
பேசப்பட்டது

காக்க மட்டுமே
தெரிந்த என் அறியாமை
காண்போரின் கேள்விகளில்
வெளிப்பட்டது

சோதனை முடிவை
உரிமையாளனிடம்
அறிவிப்பதாய் சொன்னவரை
வீட்டிற்கு அழைத்தேன்

பிறிதொரு சமயம்
என்றார்
புன்னகைத்து
விடை தந்தேன்

பார்வையாளர்கள் வரவும்
புன்னகையுடனேயான
விடை பெறலும்
மீண்டும் தொடரலாம்

குறைந்த பட்சம்
வீட்டிற்குள் வரவேற்கும்
கட்டாயமேனும்
தவிர்க்கப்படலாம்

3 comments:

ஆயில்யன் said...

//பார்வையாளர்கள் வரவும்
புன்னகையுடனேயான
விடை பெறலும்
மீண்டும் தொடரலாம்

குறைந்த பட்சம்
வீட்டிற்குள் வரவேற்கும்
கட்டாயமேனும்
தவிர்க்கப்படலாம்//

தவிர்த்தல் சில சமயங்களில் தவிக்கவும் வைத்துவிடக்கூடும்

தவிர்த்தலை விட விட்டு விலகிட நினைக்கும் மனம் நன்று :)

நாகை சிவா said...

:)

ம்ம் தவிர்க்கப்பட வேண்டும் தான். புரிவது இல்லை மக்களுக்கு.... மனம் படும் தவிர்ப்பு

அன்புடன் அருணா said...

எதையோ யாருக்கோ உணர்த்த எழுதிய கவிதை பொலிருக்கிறது.