Tuesday, June 9, 2009

வேண்டுதல்

நேரில் பார்க்கவில்லை இறைவா - ஆயினும்
நேசம் குறையவில்லை உன்னிடம்
காசு பணம் வேண்டாம் - உடன் பேச
காகிதம் இது போதும்

எண்ணங்கள் அலைமோதும் போது - அதை
எழுதிடும் திறன் வேண்டும் - இன்பம்
என்றோ வரும் என்று
எதிர்பாரா நிலை வேண்டும்

இன்ப துன்பம் பகிர்ந்து கொள்ள
இனிய தமிழ் வேண்டும் - இறைவா
உன்னிடம் நான் பேச
கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்

11 comments:

ஆயில்யன் said...

//இன்ப துன்பம் பகிர்ந்து கொள்ள
இனிய தமிழ் வேண்டும் - இறைவா
உன்னிடம் நான் பேச
கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்///

வேண்டும் வரம் தர இறைவன் உடன் ஒ.கே சொல்லுவதில்லை ! - கொஞ்சம் டைம் புடிக்கும் :)

நீங்க ஸ்டார்ட் பண்ணிடுங்க பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க :))

ஆயில்யன் said...

//இன்பம்
என்றோ வரும் என்று
எதிர்பாரா நிலை வேண்டும்///


ரொம்ப பிடிச்சது!

மனசில நிப்பாட்டி வைச்சுக்க வேண்டிய வரிகள்!

நாகை சிவா said...

//இன்ப துன்பம் பகிர்ந்து கொள்ள
இனிய தமிழ் வேண்டும் - இறைவா
உன்னிடம் நான் பேச
கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்///

இந்த வாரம் வெள்ளி கிழமை நான் ப்ரீ தான். சாட் அல்லது தொலைபேசி உன் விருப்பம் ;)

நாகை சிவா said...

வேண்டுதல் அருமை!

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

"காணி நிலம் வேண்டும்" போலவே நன்றாக இருக்கிறது. அருமை.

இராவணன் said...

//உன்னிடம் நான் பேச
கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்//
ஆமாம்.

TamilKirukkan said...

vendum varathai vazhangattum antha iraivan..

Carpe Diem said...

Ithu padikrache etho iraivanuku periya manu podra mathir iruke

G3 said...

Iniya piranthanaal vaazhthukkal :)

திகழ்மிளிர் said...

அருமையாக இருக்கிறது

தமிழுடன்
திகழ்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ...