Thursday, April 9, 2009

பற்றுதல் வேண்டாம்

வாழ்க்கை ஓட்டத்தின் நடுவே வரும்
சிந்தனை ஓட்டத்தை பதிவு செய்தே பழகிய நான்
வழக்கத்துக்கு மாறாய் சிந்திக்க என
நேரம் ஒதுக்கி பதிவு செய்யும் முதல் முயற்சி

இயல்பு மாற்றம் கொஞ்சம் கடினமே

மனதின் தாக்கத்தை எழுதி, பின் பெயரிட்டே பழக்கம்
மாறாய் பெயரிட்டு , பிறகு எழுத ஏனோ தயக்கம்

என் சிந்தனை , என் எழுத்து , எனக்காய் என்ற நிலை மாறி
எண்ண ஓட்டங்களை சீர் தூக்கி எழுத ஒரு கட்டாயம்

இயல்பு மாற்றம் கொஞ்சம் கடினமே

இயல்பு மாற்றம் யாவர்க்கும் கடினமா?
தலைப்பு ஒன்றை பற்றி எழுதுவது எனக்கு தகாதா?

பரிசோதிக்க .. . முயற்சிக்கலாம் என முடிவெடுத்தேன் - தலைப்பாய்
" பற்றுதலே வேண்டாம் " என பகர்ந்திட முனைந்தேன்

தலைப்பை தேர்ந்தெடுக்கவே தனிமையை பற்றினேன்
இறைவன் தாளுடன் கூடவே எழுதும் இத்தாளையும் பற்றிட நேர்ந்தது

தலைப்பு ஒன்றை பற்றி எழுத எனக்கு தகாது என்று நிரூபிக்க
தக்க சான்றாய் இவையிங்கு அமைந்தன

என் சுயமும் , சுயநலமும் கொஞ்சமும் குறைந்த பாடில்லை
எந்த ஒரு பொது நலனும் சுயநலம் இல்லாமல் அமைய முடியாதென
சமாதானம் சொல்லி முடிவெடுத்தேன்

படிக்கும் மக்களை மனதில் பற்றி - இனி
பற்றுதலே வேண்டாம் - தலைப்பை
பற்றுதலே வேண்டாம் என .. :-)

6 comments:

ஆயில்யன் said...

//இறைவன் தாளுடன் கூடவே எழுதும் இத்தாளையும் பற்றிட நேர்ந்தது//


பற்றுதல் வேண்டாம் - இறை ஒன்றையே பற்றிக்கொள்ளுங்கள் என்பதே கூட நமக்கு அறிவுருத்தப்படும் வாசகங்கள் தானே!!

ஆயில்யன் said...

//எந்த ஒரு பொது நலனும் சுயநலம் இல்லாமல் அமைய முடியாதென
சமாதானம் சொல்லி முடிவெடுத்தேன்/

:)

நாகை சிவா said...

:)

Anusha R said...

very excellent thoughts subha.
keep itup.

கவிதா | Kavitha said...

இயல்பு மாற்றம் கொஞ்சம் கடினமே//

பழகிவிட்டால் சரியாகிவிடும் அல்லவா?

//எண்ண ஓட்டங்களை சீர் தூக்கி எழுத ஒரு கட்டாயம்
//

நீங்களாக நினைத்தானே அது கட்டாயம்?


//
எந்த ஒரு பொது நலனும் சுயநலம் இல்லாமல் அமைய முடியாதென
சமாதானம் சொல்லி முடிவெடுத்தேன்
//

ம்ம் ரொம்ப யோசிக்காமேயே சரின்னு படுது..

எல்லா பொதுநலத்திலும் ஒரு சுயநலம் இருக்கத்தான் செய்கிறது.. :)

//இனி
பற்றுதலே வேண்டாம் - தலைப்பை
பற்றுதலே வேண்டாம் என .. :-)
//

:) ம்ம்.. உங்க முடிவால் நாங்க தப்பிச்சோம்.. !! :)

சுபா நல்லா இருக்குங்க. .இன்னும் உங்களின் பதிவை நான் கூகுல் ரீடரில் இணைச்சுக்கல. .அதான் மொத்தமாக வந்து பின்னூட்டம் :)

கீதா சாம்பசிவம் said...

//இயல்பு மாற்றம் கொஞ்சம் கடினமே

இயல்பு மாற்றம் யாவர்க்கும் கடினமா?
தலைப்பு ஒன்றை பற்றி எழுதுவது எனக்கு தகாதா?//

கடினமான ஒன்றே. எனினும் காலத்தின் ஓட்டத்தில் நம்மை அறியாமலேயே சில மாற்றங்கள் வந்தே தீருகின்றது. அலங்காரத் தமிழில், அடுக்கு மொழியில் கவிதைகள் எழுதிய நான் இப்போது எளிமையான பேச்சுத் தமிழுக்கு மாறி விட்ட யதார்த்ததைப் போல. எனினும் உங்கள் உணர்வைப் பூரணமாய்ப் புரிந்து கொள்கின்றேன். வாழ்த்துகள்.