Monday, April 6, 2009

மழை ஈரம்

வறண்ட விருட்சங்கள் எல்லாம்
புது பொலிவு பெற
பெய்யும் மழையில்
இறங்கி நடக்கிறேன்

பள்ளிக் காலம் முதல்
இன்றைய
பணியின் கோலம் வரை
எல்லா கதையும் பேசி முடிக்கிறேன்

உன் சிறு பிராயம் போலவே
கைப்பிடித்து நான் நலமாய்
வீட்டின் உள் சேர்ந்ததும்
விடை பெற்று செல்கிறாய்

நான்
உலர்ந்த ஆடைக்கு
மாறி
கொண்டிருக்கிறேன்

8 comments:

G3 said...

மழையில் நனைவதே ஒரு தனி சுகம் தான் :)

நாகை சிவா said...

ம்ம்ம் பள்ளி காலம் தான் நினைவில் வருகிறது.

தூறலும், மண் வாசனையும், நாகையில் ஏதாவது ஒரு டீக்கடையில் சூட சூட ஒரு தேநீரும், பஜ்ஜியும் சாப்பிட்டால் அது சொர்க்கம்!

ஆயில்யன் said...

//தூறலும், மண் வாசனையும், நாகையில் ஏதாவது ஒரு டீக்கடையில் சூட சூட ஒரு தேநீரும், பஜ்ஜியும் சாப்பிட்டால் அது சொர்க்கம்!//


மறுமுறை ரசித்து சொல்கிறேன்

அருமையான அனுபவம்

:))

Anusha R said...

* தற்பொது இங்கு கடும் வெய்யில்,
உன் கவிதை எனும்
கோடை மழையில் நனைந்த சுகம் ,
வெய்யிலின் தாக்கம் என்னை சுடவில்லை.*

சுபஸ்ரீ இராகவன் said...

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

நான் உலர்ந்த ஆடைக்கு மாறி இருந்தால் கூட
உங்கள் எல்லோரையும் மழையின் ஈரம் இன்னும் நனைத்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி

கவிதா | Kavitha said...

//சூட சூட ஒரு தேநீரும், //

சிவா... அது சுட சுட..

சூட சூட.. ன்னா அது பூவாக இருக்கவேண்டும்ம்ம்ம்ம்ம் :)

//நான்
உலர்ந்த ஆடைக்கு
மாறி
கொண்டிருக்கிறேன்
//

:)) இல்லன்னா ஜலதோஷம் பிடிச்சிக்கும்.. !!

கீதா சாம்பசிவம் said...

//நான்
உலர்ந்த ஆடைக்கு
மாறி
கொண்டிருக்கிறேன் //

மாற்றம் புரிகின்றது.

பிரவின்ஸ்கா said...

கவிதை மிகவும் அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா