Monday, March 23, 2009

அத்துமீறிய ஊடுறுவல்

அதிகாலை
ஜன்னலை மெதுவாய் திறந்தேன்

தென்றல்
வீசியது

மெலிதாய்
புன்னகைத்து
அடுப்பில்
நீர் ஏற்றினேன்

புயலின் துணை கொண்டு
தென்றல் கதவை உடைத்து
உள் நுழைந்தது

உலையில் கொதித்து
அடங்கியது சாதம்
மதிய உணவுக்காய்
எடுத்து கட்டி வைத்தேன்

எஞ்சியது இரவுக்கும்
தொடரலாம்

6 comments:

நிலாரசிகன் said...

//மெதுவே//

இப்படி ஒரு வார்த்தை கேள்விபட்டதில்லையே நான்? வட்டார வழக்கோ?

மெதுவாய்,மெதுவாக...

கவிதையின் தலைப்பு அருமை :)

சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி நிலாரசிகன்.

வட்டார வழக்கா என்று தெரியவில்லை.

வார்த்தை பலர் ஆள கேள்விப்பட்டுள்ளேன்.

இலக்குவண் said...

நல்ல கவிதை.

மெதுவே நானும் அறிந்ததில்லை.

மெதுவாய் பொருந்தும் என்றென்னுகிறேன்.

நாகை சிவா said...

:)

Archive activate pannen. Unnoda old post ku ellam poga mudiyala!

சுபஸ்ரீ இராகவன் said...

சரி.. இருவரின் வாக்கு(வாதத்தின்) படி
"மெதுவாய்" - மாற்றப்பட்டது :-)

சிவா - தொகுப்பில் முந்தைய பதிவுகளும் ( பழையது என மனம் ஏற்க மறுக்கிறது :-))உள்ளன. இருந்தாலும் தெளிவாய் இருக்க மாற்றம் செய்கிறேன்.

மணிகண்டன் said...

Nice one subashree.