Saturday, March 21, 2009

மெல்ல திறந்தது கதவு



Peter.. Jackie.. Paula.. Chitra..
Status..Meeting.. Tax.. Stock.. Visa ..

இவற்றிற்கு இடையில்
என் நலம் விசாரித்த ஒரு வார்த்தை
எனக்கும் உயிர் இருப்பதாய் உணர்ந்தேன்.
மெல்ல திறந்தது கதவு ..

நலமா??

ஆனால் இன்று அந்த விசாரிப்பும்
ஓர் அன்றாட வழக்கமாய் விட்டது
தன் தனித்துவத்தை இழந்து..

நலமா என்றால் நலம் என்ற பதிலை மட்டுமே
எதிர்பார்க்கும் மனிதர்களிடம்
என் நலத்தை சொன்னால் என்ன
சொல்லாமல் விட்டால் என்ன ?..

மெல்ல திறந்தது கதவு ..

தனித்துவம்

தனித்துவமாய் விளங்கும் பெருமை
என்றும் தத்துவங்களுக்கே உண்டு
ஆனால்..
இன்று தத்துவங்களுமே கேலிக்குறிய பொருளாய்

தத்துவங்களுக்கே இல்லாத தனித்துவம் எங்கோ
தனக்கு மட்டும் இருப்பதாய் கற்பனையில் நான்

மெல்ல திறந்தது கதவு ..

கற்பனை

கற்பனையில்லாத மனித வாழ்வு இல்லை
மண்ணுக்குள் போகும் மனிதனை சற்று
விண்ணையும் எட்டிப் பார்க்க வைத்தது கற்பனைதான்

மெல்ல திறந்தது கதவு ..

மனிதன்

பெயர்க்காரணம் சொல்ல முடியாத அளவுக்கு
அழிந்து போனவைகளில் இன்னும்
அக்கரைக்கும் இக்கரைக்கும் அல்லாடி
கொண்டிருக்கும் மனிதம்..

மெல்ல திறந்தது கதவு ..

அழிவு

சரிந்து விழுவதை அழிவு என்றால்
அருவியின் பெருமை எங்கே எடுத்துச் சொல்ல

மெல்ல திறந்தது கதவு ..

பெருமை

பிறப்பு முதல் இறப்பு வரை
பணத்திற்கு போட்டியாக தேடப்படும்
மற்றொரு ஆசைப் பொருள் தான் இந்த பெருமையோ?

மெல்ல திறந்தது கதவு ..

பொருள்

பொருளைத் தேடித்தான் மனித வாழ்க்கையே
அது பொருள் பொதிந்த தேடலா என்பதே கேள்வி

மெல்ல திறந்தது கதவு ..

தேடல்

அனைவரும் கடந்து வந்த பாதைதான் இத்தேடல்
அதற்கு எழுதும் இவ்வரிகளே சாட்சி..

அத்தேடலின் முடிவு.....??

கதவுகள் ஏனோ மெல்லத்தான் திறக்கின்றன... :-)

6 comments:

நாகை சிவா said...

முதல் முறையாக உன்னுடைய பதிவில்.

செம கலக்கலா இருக்குகே!

//நலமா என்றால் நலம் என்ற பதிலை மட்டுமே
எதிர்பார்க்கும் மனிதர்களிடம்
என் நலத்தை சொன்னால் என்ன
சொல்லாமல் விட்டால் என்ன ?..//

நல்ல கேள்வி!

//பொருளைத் தேடித்தான் மனித வாழ்க்கையே
அது பொருள் பொதிந்த தேடலா என்பதே கேள்வி//

அருமையா இருக்கு சுபஸ்ரீ!

//கதவுகள் ஏனோ மெல்லத்தான் திறக்கின்றன... :-)//

திறக்குற வரைக்கும் சரி தான் :)

சுபஸ்ரீ இராகவன் said...

பின்னூட்டத்திற்கு நன்றி சிவா.

கீதா சாம்பசிவம் said...

சில தேடல்களுக்கு கதவு மெதுவாய்த் தான் திறக்கும். நல்லா இருக்கு கவிதை, நல்ல முதிர்ச்சி தெரியுது.

சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி கீதா. இங்க இன்னொரு பரிமாணமும் இருக்கு.

தேட தேட அறியாமை நிறைந்துள்ள மனகதவு மெதுவாய் திறக்குது..

G3 said...

//நலமா என்றால் நலம் என்ற பதிலை மட்டுமே
எதிர்பார்க்கும் மனிதர்களிடம்
என் நலத்தை சொன்னால் என்ன
சொல்லாமல் விட்டால் என்ன ?..
//

//சரிந்து விழுவதை அழிவு என்றால்
அருவியின் பெருமை எங்கே எடுத்துச் சொல்ல//

:)) இது ரெண்டும் ரொம்ப பிடிச்சிருந்துது :)

Anusha R said...

உண்மைதான்
*வாழ்த்துக்கள் உன் கற்பனைக்கு* கற்பனை கண்டுபிடிப்புகாளாக மாறி விண்ணை தொட்டது ராகெட்டுகளாக , சரி தானே சுபா