Tuesday, March 17, 2009

புரிந்ததும் புரியாததும் ..


இந்த ஓட்டம் தேவையா?

என்றோ படித்த 10 - ஆம் வகுப்பு பாடம் ஒன்று நினைவிற்கு வருகிறது..

உலகமே ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கும் இடம் போன்றது. இங்கு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கால் இருப்பவனும் இல்லாதவனும் .. அனைவரும் ஓடி கொண்டிருக்கிறோம் .. ஓட முடியாதவர்கள் தன்னால் ஓட இயலவில்லையே என்று ஏங்கி கொண்டும்.. கொஞ்சம் மெதுவாக ஓடுகிறவர்கள் .. தன்னைத்தாண்டி ஓடுகிறவனை போல் தானும் ஓட வில்லையே என்றும் ... முதலில் ஓடுகிறவன் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள இன்னும் வேகமாய் ஓடிக் கொண்டும் இருக்கிறான்.. என்று வரும்.. ( கலப்படத்துடன் தான் எழுதி உள்ளேன் .. பாடபுத்தகத்தின் சரியான வரிகளின் தேடலில் நான்... )

அன்று படிக்கும் பொழுது.. அம்மா மீண்டும் மீண்டும் அதை சொல்லும் படி ரசித்து கேட்பாள். எனக்கு பல கோணங்களில் புரிந்து கொள்ள இயலாத அச்சமயம் .. கருத்து மனதில் தெளிவாய் பதியாவிட்டாலும்.. என் நினைவாற்றலின் சவாலை எதிர்கொள்ளும் பொறுப்புணர்வுடன் நானும் சொல்வேன்...

இன்று புரிகிறது.. பல்வேறு சிந்தனையின் இடையில்.. இந்த "ஓட்டம் தேவையா?"என்ற கேள்விக்கு பதில் தேடும் போது.. அம்மா மீண்டும் மீண்டும் இதை சொல்ல வைத்து ரசித்ததின் அர்த்தம்....

இன்றும் புரியவில்லை அம்மாவும் "ஓட்டம் தேவையா ?" என்ற கேள்விக்கு பதில் தேடி இன்றும் என்னைப்போல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாளா.. என்று..


தேடலில் கிடைத்தது... <http://www.textbooksonline.tn.nic.in/Std10.htm>>


5 comments:

இலக்குவண் said...

நினைவுகளில் ஆழ்ந்துவிட்ட இவ்வரிகளை வாழ்க்கை அவ்வப்பொழுது வெளியிழுத்துப்போடும். இப்பொழுது இந்த பதிவு அதை செய்திருக்கிறது.

நாகை சிவா said...

:)

எதை நோக்கி ஒடுறோம் என்பது தெரியாமலே சில பேர் ஒடி முடிச்சுட்டாங்க, இன்னும் சிலர் அதை பற்றி கவலை எல்லாம் எல்லாரும் ஒடுறாங்க, நாமும் ஒடனும் என்றே வளர்க்கப்பட்டு ஒடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒடுவோம்!!!

நீ படிப்பாளி தாம்மா...

சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி சிவா. :-).. சகமாணவனிடம் இருந்து படிப்பாளி பட்டம். மிக்க மகிழ்ச்சி

கீதா சாம்பசிவம் said...

ஓட்டம் எப்போ நிக்கும்? அதான் புரியலை! :(

கவிதா | Kavitha said...

//"ஓட்டம் தேவையா ?" //

ம்ம் கண்டிப்பாக தேவை சுபா..