Sunday, March 15, 2009

நிலைப்பாடு


வாரம் முழுதும் அலுவலக பணிகளில் மூழ்கி ...
அவ்வப்போது வெளிவந்து என் இருப்பை உணர்த்தி
முழுமை இல்லாமலே செல்கிறேன்....

என் இருப்பு பிறரால் அறியப்படும் தருணம் மகிழ்வைத்தந்தாலும்
மீண்டும் இருப்பை அவர் பரிசோதிக்கும் தருணம்
இருந்த என் இருப்பும் சூன்யமாய்..

இருக்கிறேன் என்று சிறு அசைவால் சொல்வதை தவிர
இருந்து அவர்க்காய் என்ன செய்கிறேன் என்பது புரியவில்லை

வற்றா இருப்பு நிலை எங்கும் நிறைந்து இருப்பதை உணர்ந்தால்தானே பேரின்பம்
பிறர் உணருமாறு என் இருப்பு இல்லாமல் போனால் விளைவுகள் அறிந்ததே!

எந்நேரமும் அலுவல்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்
எனக்காய்.. நான் செய்ய எண்ணும் செயலுக்காய்...
நேரம் ஒதுக்க முயல்கிறேன் ..

கிடைக்கும் சில நிமிடங்களில் முழுவதுமாய்
வாழ்ந்து அனுபவித்து பேரின்பம் அடைகிறேன்

சில நிமிடங்கள் என்பது மிக குறைவாய் பிறருக்கு தெரிந்தாலும்
எனக்கு நொடிகளில் 60 - ன் மடங்காய் தெரிவது இறைவன் எனக்களித்த வரம்

என் மனம் அமைதியாய் .. நிறைவாய் ஆக
வாரம் ஒரு மணி நேரம் கிடைத்தால் போதும்

என் சுற்றி உள்ளவர்களின் மனோநிலை அறிந்தும்
புன்னகையோ சிறு அசைவோ தவிர
எதுவும் தர முடியவில்லை என்ற எண்ணம் தான் ...
சில நேரம் சமன் நிலையில் இருந்து
என்னை கீழ் தள்ளுகிறது.. மற்றபடி..
நான் நலமே !!!

4 comments:

இலக்குவண் said...

//எதுவும் தர முடியவில்லை என்ற எண்ணம் தான்.
சில நேரம் சமன் நிலையில் இருந்து
என்னை கீழ் தள்ளுகிறது.. மற்றபடிநான் நலமே//

மிகவும் ஆழமான பதிவு.

சுபஸ்ரீ இராகவன் said...

:-)).. நன்றி

Karthik Murugan said...

மற்றபடி..
நான் நலமே !!! //

:))

சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி கார்த்திக் முருகன். உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.