Monday, March 9, 2009

எண்ணமே செயல்



நான் மட்டுமல்ல .... நம்மில் பலரும் எண்ணியிருக்கக்கூடும்

காலை குளியல் 10 நிமிடம்.. சரி பரவாயில்லை
சமைக்க .. காலை உணவை படைத்தவனுக்கு படைக்க முழுதாய் 30 நிமிடம்
தலை வாரி தயாராக 5 நிமிடம்
8:40 பஸ் பிடிக்க அரக்க பரக்க ஓட்டம்

2 மணி நேரம் முழுதாய் மீட்டிங்
மீட்டிங் இடையில் பாதி உண்டு முடித்த உணவை
முழுதாய் உட்கொள்ள 10 நிமிடம் மிக அதிகம்
5:20 பஸ் பிடிக்க 5 நிமிடம் தான் பாக்கி

வீடு வந்து , சில நேரம் வீட்டு அலுவல்களும்
பல நேரம் அலுவலக பணியுமாய்
உண்டு , உறங்கி , பின் எழ
மீண்டும் குளிக்க .. பத்தே நிமிடம்

அட ஒரு
10 நிமிடம் அதிகம் கிடைத்திருந்தால்....
ஒரு
5நிமிடம் முன்னால் வந்து இருந்தால்....

நான் மட்டுமல்ல .... நம்மில் பலரும் எண்ணியிருக்கக்கூடும்
என்றோ , எங்கோ , ஒரு முறையேனும்

மனிதன் வரையறுத்ததுதான் என்றாலும் - மணியை
மாற்றி அமைக்க முடிவதில்லை.

வார்த்தை தடித்து , வரம்பு மீறும் பொழுது
வாழ்ந்த அந்நொடிகள் மீண்டும் நம் வசம் வந்தால்...

விளைவுக்காய் காத்திருக்கும் , எதிர்பார்ப்பின் உச்சத்தில்
எட்டடிக்கும் கடியாரம் மாறி மணி பத்தென்றால்...

நான் மட்டுமல்ல .... நம்மில் பலரும் எண்ணியிருக்கக்கூடும்
என்றோ, எங்கோ , ஒரு முறையேனும்

எங்கெங்கிருந்தோ கிளர்ந்தெழுந்த எண்ண அலை
Benjamin Franklin வழியாய் Daylight saving

முழுதாய் ஒரு மணி நேரம் காணாமல் போவதற்கும்
மீண்டும் 60 நிமிடம்
முழுதாய் வாழ்வதற்கும் :-)

3 comments:

நாகை சிவா said...

//எங்கெங்கிருந்தோ கிளர்ந்தெழுந்த எண்ண அலை
Benjamin Franklin வழியாய் Daylight saving

முழுதாய் ஒரு மணி நேரம் காணாமல் போவதற்கும்
மீண்டும் 60 நிமிடம் முழுதாய் வாழ்வதற்கும் :-)//

ம்ம் அது சரி! எங்களுக்கு எல்லாம் அந்த கொடுப்பினை இல்லையேம்மா! :(

சுபஸ்ரீ இராகவன் said...

இது கானல் நீர் சிவா .. கொடுப்பினை என்ற அளவுக்கு இல்லை.. :-)

G3 said...

//Benjamin Franklin வழியாய் Daylight saving

முழுதாய் ஒரு மணி நேரம் காணாமல் போவதற்கும்
மீண்டும் 60 நிமிடம் முழுதாய் வாழ்வதற்கும் :-)//

நல்லா யோசிக்கறீங்க :))) Liked this one a lot :D